ADDED : ஜூலை 22, 2025 03:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் நகராட்சி கூட்டம் தலைவர் ரம்யா தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ஆதவன், கமிஷனர் அசோக்குமார் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க., கவுன்சிலர் சின்னச்சாமி பேசுகையில், கடந்த நான்கரை ஆண்டுகளில் திருமங்கலம் நகராட்சி பகுதியில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., உதயகுமார் நிதி ஒதுக்கீடு செய்து ஏதாவது பணிகள் நடந்துள்ளதா என கேள்வி எழுப்பினார்.
பதில் அளித்த கமிஷனர் அசோக் குமார், 'இதுவரை நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை' என்றார். இதையடுத்து தி.மு.க., அ.தி.மு.க., கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தெருவிளக்குகள், புதியகுடிநீர் இணைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பெரும்பாலான கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.