/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் கொதிப்பு
/
நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் கொதிப்பு
நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் கொதிப்பு
நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு மண்டல கூட்டத்தில் கவுன்சிலர்கள் கொதிப்பு
ADDED : பிப் 20, 2025 05:38 AM
திருப்பரங்குன்றம்: மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல கவுன்சிலர்கள் கூட்டம் திருப்பரங்குன்றம் அலுவலகத்தில் நடந்தது. தலைவர் சுவிதா தலைமை வகித்தார். துணை மேயர் நாகராஜன், உதவி கமிஷனர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தனர்.
கவுன்சிலர்கள் கருப்பசாமி, ரவிச்சந்திரன், ரவி, சுவேதா, இந்திராகாந்தி பேசியதாவது:
அனைத்து நீர் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வார வேண்டும். தென்கால் கண்மாய் வரத்து கால்வாய்களை சர்வே செய்து கால்வாய்களை காப்பாற்ற வேண்டும். அனைத்து நீர் வரத்து கால்வாய்களிலும் கழிவு நீரே தேங்கி நிற்கிறது.
விநாயகா நகரில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடிநீர் தொட்டி கட்டிய நாள் முதல் பயன்பாடின்றி சிதிலமடைந்து கிடைக்கிறது. பசுமலை மெயின் ரோட்டில் சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்பட்ட விநாயகர் கோயிலை வேறு இடத்தில் அமைக்க வேண்டும். 83வது வார்டில் இரண்டு ஆண்டுகளாக எந்த பணியும் நடக்கவில்லை. கவுன்சிலர் நிதி என்னாச்சு. அனைத்து வார்டுகளுக்கும் பாரபட்சமின்றி நிதி ஒதுக்க வேண்டும்.
திருநகர் பாலசுப்பிரமணியன் நகர் இணைப்பு தரைப்பாலம் முற்றிலும் சேதமடைந்து 15 நாட்களுக்கு மேல் ஆகிறது. 2 கி.மீ., சுற்றி தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அம்ருத் குடிநீர் திட்டத்தை சவுபாக்கியா நகர் உட்பட அனைத்து பகுதிகளுக்கும் முறையாக செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு கூறினர்.