ADDED : மே 22, 2025 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல கூட்டம் திருப்பரங்குன்றம் அலுவலகத்தில் நடந்தது.
மண்டல தலைவர் சுவிதா தலைமை வகித்தார். உதவி கமிஷனர் பார்த்தசாரதி, பொறியாளர்கள் பங்கேற்றனர். வார்டு 80, 81, 82, 83ல் ரோட்டின் இருபுறமும் பேவர் பிளாக் தளம் அமைத்தல், பல்வேறு வார்டுகளில் ஆழ்குழாய் அமைப்பது உட்பட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தெரு விளக்குகளில் 20 வாட் பல்புகள் பொருத்தப்படுவதால் வெளிச்சம் இல்லை. விடுபட்ட பகுதிகளில் அம்ரூத் குடிநீர் திட்ட பணிகள் துவக்க வேண்டும்.
அனைத்து வார்டுகளிலும் தெரு குப்பையை அகற்றும் வாகனங்கள் சரிவர வராததால் தெருக்களில் குப்பை குவிந்து சுகாதாரகேடு ஏற்படுகிறது என கவுன்சிலர்கள் கூறினர்.