ADDED : ஆக 30, 2026 03:40 PM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி: பரவை அரசு மேல்நிலைப்பள்ளியில் மேலாண்மை குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மேலாண்மைக் குழுத் தலைவர் குமாரவேல் தாஸ் தலைமை வகித்தார். பள்ளி வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். மாணவர்களின் தேவை, அடிப்படை வசதிகளை விரிவுபடுத்த துறை அதிகாரிகளை சந்தித்து முறையிட பெற்றோர் சார்பில் கோரிக்கை விடுத்தனர். தலைமை ஆசிரியர் பாலமுருகன், ஆசிரியர்கள் இம்மானுவேல், காளிதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.
