தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சிதிலமடைந்த ரேஷன் கடையால் அச்சத்தில் மக்கள்

சிதிலமடைந்த ரேஷன் கடையால் அச்சத்தில் மக்கள்

சிதிலமடைந்த ரேஷன் கடையால் அச்சத்தில் மக்கள்


ADDED : ஆக 30, 2026 03:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2026 03:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேலுார்: சுந்தரராஜபுரத்தில் சிதிலமடைந்த ரேஷன் கடையை அதிகாரிகள் பாதி இடித்த நிலையில், கண்டுகொள்ளாததால் மீதமுள்ள கட்டடம் இடிந்து விழுகிறது. இதனால் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது.

சுந்தரராஜபுரத்தில் குடியிருப்பு, நாடக மேடை, குடிநீர் தொட்டி அருகே பகுதி நேர ரேஷன் கடை 16 ஆண்டுகளாக செயல்பட்டது. இக்கடையை புதுார், சங்கர ஆசிரமம், களப்பாறை, வெளுத்துப்பட்டி, சுந்தரராஜபுரம் பகுதியின் 450-க்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகினறனர். ரேஷன் கடையின் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து பொருட்கள் வாங்கும் கார்டு தாரர்கள் மீது விழுந்ததால், ஓராண்டுக்கு முன் கடை மூடப்பட்டது. தொடர்ந்து மந்தை அருகே நெவுலிநாத சுவாமி கோயிலில் செயல்படுகிறது.

அப்பகுதி மணிவேல் கூறியதாவது : பொதுமக்கள் புதிய கடை வேண்டும் என கோரியதால் ஓராண்டுக்கு முன், அதிகாரிகள் கடையை பாதி இடித்தனர். பின் அப்படியே விட்டுச் சென்றதால் பணி தொடரவில்லை.

கடை அருகே வசிப்போர், கால்நடை, தண்ணீர் பிடிக்க வருவோர் மீது கட்டட சிமென்ட் பூச்சுகள் விழுவதால் உயிர் பயத்துடன் நடமாடுகிறோம். கோயிலுக்குள் ரேஷன் பொருட்களை வைத்திருப்பதால் கார்டுதாரர்கள் வெயிலில் காத்து கிடக்கிறோம். பகுதி நேர ரேஷன் கடை என்பதால் நுாற்றுக்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள் ஒரே நேரத்தில் கூடுகின்றனர். இதனால் தள்ளு முள்ளு ஏற்படுகிறது. கோயிலில் இயங்குவதால் சிலநாட்கள் பெண்கள் கோயிலுக்குள் வருவதை தவிர்க்கின்றனர். புதிய கடை கேட்டு கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றியும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மீதியுள்ள கட்டடத்தை அகற்றிவிட்டு, புதிய கடை கட்ட வேண்டும் என்றார்.

டி.எஸ்.ஓ., சாந்தி கூறுகையில், ‘‘புதிய கடை கேட்டுள்ளனர என, அதிகாரியிடம் கேட்டு அதன்படி புதிய கடை கட்ட ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us