ADDED : மார் 02, 2024 04:14 AM
அ நிறம் | அளவு
திருமங்கலம், : திருமங்கலம் கப்பலுார் அரசு கலைக் கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் 7 நாட்கள் சிறப்பு முகாம் காந்திநகர், உச்சப்பட்டி ஊராட்சி, கப்பலுாரில் நடந்தது. முதல்வர் லட்சுமி துவக்கி வைத்தார்.
உச்சபட்டி ஊராட்சி தலைவர் பிச்சையம்மாள், கப்பலுார் ஊராட்சி தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தனர். டாக்டர் ஜெயக்கொடி ரத்ததானம், எய்ட்ஸ் இல்லாத சமூகம் குறித்து பேசினார். சிறப்பு முகாமில் சுற்றுச்சூழல் சீரமைப்பு, ஆலயப் பணிகள், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, பிளாஸ்டிக் பை ஒழிப்போம், மஞ்சள் பை பயன்படுத்துவோம் என்ற விழிப்புணர்வு ஊர்வலம், மரக்கன்று நடப்பட்டது. நிறைவு நாளில் இன்ஸ்பெக்டர் விஜய காண்டீபன் பேசினார். திட்ட அலுவலர்கள் ஜெகநாதன், மீனா ஒருங்கிணைத்தனர்.
