/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்தடை கோரி வழக்கு: கோர்ட் உத்தரவு
/
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்தடை கோரி வழக்கு: கோர்ட் உத்தரவு
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்தடை கோரி வழக்கு: கோர்ட் உத்தரவு
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்தடை கோரி வழக்கு: கோர்ட் உத்தரவு
ADDED : ஜூன் 26, 2025 01:59 AM
மதுரை: துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கு அனுமதியளிக்கக்கூடாது என தாக்கலான வழக்கில்,'சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்து நிவாரணம் தேடலாம்' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மக்கள் நுகர்வோர் பாதுகாப்பு பேரவை நிர்வாக செயலர் சிந்தா தாக்கல் செய்த பொதுநல மனு:
துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018 மே மாதம் போராட்டம் நடந்தது. துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். இயல்புநிலை பாதித்து, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.
தற்போது துாத்துக்குடி மக்கள் அமைதியாக, வழக்கமான பணியில் ஈடுபட்டுள்ளனர். சில அமைப்புகள் ஆலைக்கு எதிரான கருத்துக்களை உண்மைக்குப் புறம்பாக திட்டமிட்டு, பரப்புகின்றன. துாத்துக்குடியில் பல தொழிற்சாலைகள் உள்ளன. ஆனால் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மட்டும் போராடுகின்றனர். இவர்களுக்கு பின்புலமாக உதவுகின்றனர்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக எவ்வித போராட்டத்திற்கும் அனுமதியளிக்கக்கூடாது.
ஆலைக்கு எதிராக வெளிநபர்கள் துண்டுபிரசுரம் வினியோகிக்க, சுவரொட்டிகள் வைக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்து நிவாரணம் தேடலாம். வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.