/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு சட்டப்பணிகள் ஆணைக்குழு பதிலளிக்க கோர்ட் உத்தரவு * சட்டப்பணிகள் ஆணைக்குழு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ADDED : நவ 07, 2025 05:53 AM
மதுரை: போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகையை தேசிய சட்டப்பணிகள் ஆணையக்குழு (என்.ஏ.எல்.எஸ்.ஏ.,) பரிந்துரைத்ததற்கு நிகராக வழங்க வேண்டும் என தாக்கலான வழக்கில் மாநில, மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழு பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை ஷர்மிளா பானு தாக்கல் செய்த பொது நல மனு: போக்சோ சட்டத்தின் கீழ் ஒரு பிரத்யேக இழப்பீட்டுத்திட்டம் இல்லாததால், மாநிலக்குழு நிர்ணயிக்கும் இழப்பீட்டு திட்டங்களை சார்ந்திருக்கும் நிலையுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடுகள் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகின்றன.
நிபுன் சக்சேனா வழக்கில் என்.ஏ.எல்.எஸ்.ஏ., பரிந்துரைத்த குறைந்தபட்ச, அதிகபட்ச இழப்பீட்டு வரம்புகளை மாநில அரசுகள் பின்பற்ற உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. எனினும், என்.ஏ.எல்.எஸ்.ஏ.,வை விட தமிழக சட்டப்பணிகள் ஆணையக்குழுவின் கீழ் வழங்கப்படும் இழப்பீடுகள் 20 முதல் 50 சதவீதம் குறைவாக உள்ளன.
அதிலும் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்கள் மாநிலம் நிர்ணயித்த அளவை விட குறைவான இழப்பீடுகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குகின்றன. எனவே போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமமான இழப்பீடுகளை வழங்கும் வகையில், பிரத்யேக இழப்பீட்டு நிதியம் அமைக்கப்பட வேண்டும். அதுவரை மாநில அரசு, என்.ஏ.எல்.எஸ்.ஏ.,வின் இழப்பீட்டு தொகைகளுக்கு நிகராக வழங்க வேண்டும்.
போக்சோ சட்ட விதிகளின்படி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இழப்பீட்டை அளவிடவும், அதை மாநில, மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்திற்கு அனுப்பவும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. எனவே, என்.ஏ.எல்.எஸ்.ஏ.,வின் திட்டத்திற்கு இணையாக இழப்பீட்டை நிர்ணயிப்பது தொடர்பாக சிறப்பு நீதிமன்றங்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அழகுமணி ஆஜரானார். மாநில, மாவட்ட சட்டப்பணிகள் ஆணையச் செயலர்கள், சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கூடுதல் பதிவாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிச., 8க்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.