தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அஜித்குமார் கொலை வழக்கில் தடயவியல் ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம்

அஜித்குமார் கொலை வழக்கில் தடயவியல் ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம்

அஜித்குமார் கொலை வழக்கில் தடயவியல் ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம்


ADDED : நவ 07, 2025 05:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2025 05:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் மத்திய தடய அறிவியல் ஆய்வு அறிக்கையை 3 வாரத்தில் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மடப்புரம் கோயிலுக்கு மதுரை மாவட்டம் திருமங்கலம் பேராசிரியை நிகிதா வந்த காரில் இருந்த நகை திருடுபோனது. அவர் திருப்புவனம் போலீசில் புகாரளித்தார். கோயில் காவலாளியான அஜித்குமாரை ஜூன் 27ல் போலீசார் விசாரித்தனர். தனிப்படை போலீசார் தாக்கியதில் அவர் இறந்தார். 5 போலீசார் கைது செய்யப்பட்டனர்.

வழக்கை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. போலீஸ் வாகன ஓட்டுநர் ராமச்சந்திரனையும் கைது செய்து சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வேண்டும். சாட்சிகளுக்கு பாதுகாப்பு வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கார்த்திக் ராஜா, மாரீஸ்குமார் மனு தாக்கல் செய்தனர்.

நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. செப். 24ல் விசாரணைக்கு வந்தபோது, இதுவரை நடந்த விசாரணை குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்தனர்.

இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 90 நாட்கள் அவகாசம் கோரிய நிலையில், இவ்வழக்கு தொடர்பாகவும், நகை திருட்டு வழக்கு தொடர்பாகவும் 6 வாரங்களுக்குள் இறுதி குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஐதராபாத்தில் இருந்து மத்திய தடய அறிவியல் ஆய்வக அறிக்கை கிடைத்துள்ளது. டில்லிக்கு அனுப்பப்பட்ட மத்திய தடய அறிவியல் ஆய்வக அறிக்கை கிடைக்கவில்லை. எனவே கால அவகாசம் வேண்டும் என சி.பி.ஐ., தரப்பில் கோரப்பட்டது.

ஏற்கனவே 6 வாரங்கள் அவகாசம் வழங்கியும் மேலும் அவகாசம் கேட்பது ஏற்புடையதல்ல. டில்லி மத்திய தடய அறிவியல் ஆய்வகம், 3 வாரங்களில் அறிக்கையை வழங்க வேண்டும்.

அறிக்கை வழங்கப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சி.பி.ஐ., பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வி சாரணை யை நவ., 27க்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us