தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மின்சாரம் தாக்கி மாடு உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி மாடு உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி மாடு உயிரிழப்பு


ADDED : செப் 04, 2026 10:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2026 10:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அவனியாபுரம், செப். 5-

மதுரை அவனியாபுரம் யாதவா தெருவை சேர்ந்த கண்ணன் விவசாயி. இவர் நேற்று மாலை மாடுகளுக்கு புல் அறுப்பதற்காக மாட்டு வண்டியில் திருப்பரங்குன்றம் சாலையிலுள்ள விவசாய நிலத்திற்கு சென்றார். ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழை செய்தது. மழை குறைந்தபின் கண்ணன் புல் அறுத்துவிட்டு மாட்டு வண்டியில் வீடு திரும்பினார். அவனியாபுரம் போலீஸ் ஸ்டேஷன் அருகே ரோடு ஓரத்திலிருந்த மின்மாற்றி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அதில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு மாட்டின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் ஒரு மாடு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மற்றொரு மாடு ஓடிச் சென்றது.

கண்ணன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவனியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us