/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜல்லிக்கட்டுக்கு காப்பு கட்டு மாடுபிடி வீரர்கள் விரதம்
/
ஜல்லிக்கட்டுக்கு காப்பு கட்டு மாடுபிடி வீரர்கள் விரதம்
ஜல்லிக்கட்டுக்கு காப்பு கட்டு மாடுபிடி வீரர்கள் விரதம்
ஜல்லிக்கட்டுக்கு காப்பு கட்டு மாடுபிடி வீரர்கள் விரதம்
ADDED : டிச 29, 2024 04:38 AM
அவனியாபுரம்: மதுரை அவனியாபுரத்தில் மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க காப்பு கட்டி விரதம் மேற்கொள்கின்றனர்.
ஆண்டின் முதலாவதாக அவனியாபுரத்தில் தைப்பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு நடக்கிறது. அங்கு 150க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் உள்ளனர். அவர்கள் மந்தையம்மன் கோயில், அய்யனார் கோயிலில் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர்.
மாடுபிடி வீரர்கள் கார்த்திக், மணிபாய், சுந்தர்ராஜ், ஜில்லா, விருமாண்டி கூறியதாவது:
மனக்கட்டுப்பாடுகளுடன் 21 முதல் 48 நாட்களுக்கு விரதமிருப்போம். தினமும் காலையில் கோயிலுக்குச் செல்வது, ஓட்டம், நடை, வேகமாக நடத்தல், நீச்சல், கண்களுக்கு சிறப்பு பயிற்சியும் மேற்கொள்கிறோம்.
வழக்கமாக ஊர் கடைசியில் வாடிவாசல் அமைத்து காளைகளை அவிழ்த்து விட்டு பிடிக்க பயிற்சி எடுப்போம்.
அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் பங்கேற்போம். காளைகளை பிடித்து பரிசு பெறவும், வீரர்களுக்கும், காளைகளுக்கும் காயம் ஏற்படக்கூடாது என்றும் வேண்டி விரதம் இருக்கிறோம் என்றனர்.