/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கொட்டகையில் தெரு நாய்கள் கடித்து சினைக்கு தயாரான பசுக்கள் பலி
/
கொட்டகையில் தெரு நாய்கள் கடித்து சினைக்கு தயாரான பசுக்கள் பலி
கொட்டகையில் தெரு நாய்கள் கடித்து சினைக்கு தயாரான பசுக்கள் பலி
கொட்டகையில் தெரு நாய்கள் கடித்து சினைக்கு தயாரான பசுக்கள் பலி
ADDED : ஆக 28, 2025 05:55 AM
மதுரை, : மதுரை கிருஷ்ணாபுரம் காலனி ஏழாவது தெருவை சேர்ந்தவர் பெரிய கருப்பன். இவரது வீட்டுக்கு சற்று தள்ளி கொட்டகை அமைத்து பசுக்களை வளர்த்து வருகிறார்.
நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கொட்டகையை பிரித்துக் கொண்டு உள்ளே நுழைந்த தெரு நாய் கூட்டம், சினைப்பிடிக்கும் பருவத்தில் இருந்த ஒன்றரை வயதுடைய இரண்டு கன்றுகளையும், பிறந்து சில நாட்களேயான இளம் கன்றையும் கொடூரமாக கடித்தன. இதில் இரண்டு சினை கன்றுகளும் வயிறு கிழிந்து பரிதாபமாக இறந்தன. பெரிய கருப்பன் கூறியதாவது :
இந்தப் பகுதியில் ஏராளமான வெறி நாய்கள் திரிகின்றன. அவற்றால் இளங்கன்று கடிபட்ட நிலையில் சிகிச்சை அளித்து வருகிறோம். சினைக் கன்று உயிருக்கு துடித்த நிலையில் தல்லாகுளம் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அங்கு சிகிச்சை அளிக்க டாக்டர் இல்லை. கால்நடைகளுக்கான மொபைல் ஆம்புலன்ஸ் எண்ணுக்கு அழைத்தாலும் வருவதற்கு வாய்ப்பில்லை என்றனர்.
இச்சம்பவத்தில் கொட்டகை சேதமடைந்ததோடு கன்றுகளும் இறந்தன. இதே போல நாய்கள் கூட்டமாக சேர்ந்து மனிதரை கடித்தால் நிலைமை என்ன ஆகும். இதில் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

