/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கட்டுமான பணியின் போதே பில்லர், சுவர்களில் விரிசல் உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்டில் ஆபத்து
/
கட்டுமான பணியின் போதே பில்லர், சுவர்களில் விரிசல் உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்டில் ஆபத்து
கட்டுமான பணியின் போதே பில்லர், சுவர்களில் விரிசல் உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்டில் ஆபத்து
கட்டுமான பணியின் போதே பில்லர், சுவர்களில் விரிசல் உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்டில் ஆபத்து
ADDED : ஜன 02, 2026 06:17 AM

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் மூன்று ஆண்டுகளாக நடைபெறும் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப் பணிக்காக கட்டப்படும் புதிய கட்டட பில்லர், சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
2023ல் உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணிக்காக அரசு ரூ.8 கோடி நிதி ஒதுக்கியது. 2023 ஜூலையில் புதுப்பிக்கும் பணிகள் துவங்கியது. விரிவாக்கத்துக்கு கூடுதலாக ஒரு ஏக்கர் தேவைப்பட்டதால், உசிலம்பட்டி ஒன்றிய நிர்வாகத்தில் இருந்த 7.85 ஏக்கர் சந்தை திடல், உசிலம்பட்டி நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.
பஸ் ஸ்டாண்ட் பணியில் தற்போது பிரதான கட்டடப்பணிகள் நடக்கின்றன. இதில் அடுத்தடுத்து அமைத்துள்ள பில்லர் ஒன்றில், மேலிருந்து அடிப்பகுதி வரையில் நீண்ட விரிசல் ஏற்பட்டுள்ளது. கடைகளுக்கு சுவர் எழுப்பி, சிமென்ட் பூசி, சுண்ணாம்பு அடித்து நிறைவு பெறும் நிலையில், சில கடைகளின் சுவர்களில் 2 புறமும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
கட்டுமான பொறியாளர்கள் கூறியதாவது: பில்லருக்காக அமைத்த இரும்புக் கம்பிகள் துருப்பிடிப்பதால் அதன் தன்மையை இழக்கும் போது பில்லர்களில் விரிசல் ஏற்படும். உடனே இவற்றை சரிசெய்ய வேண்டும் என்றனர். நகராட்சி பொறியாளர் சசிக்குமார், விரிசல் விட்டுள்ள பகுதிகளை பார்வையிட்டு சரிசெய்யப்படும் என்றார். தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் பஸ் ஸ்டாண்டின், புதுப்பிப்பு பணியை அதிகாரிகள் கண்காணித்து, தரமான, உறுதியான கட்டுமான பணிகள் நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

