ADDED : டிச 02, 2024 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம், : திருப்பரங்குன்றம் அமிர்த வித்யாலயம் பள்ளியில் கண்காட்சி நடந்தது. மாணவர்களின் படைப்புகள் இடம்பெற்றன.
பள்ளி முதல்வர் சசிரேகா துவக்கி வைத்தார். ஆண்டிப்பட்டி அரசு கலை அறிவியல் கல்லுாரி பேராசிரியர் ஜெயக்குமார், மதுரை தியாகராஜர் கலை அறிவியல் கல்லுாரி பேராசிரியர் காஞ்சனா, ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ராஜசேகரன், மாதா அமிர்தானந்த மயி மடத்தின் உறுப்பினர் அபிராமி கலந்து கொண்டனர்.