ADDED : நவ 12, 2025 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் வேளாண் துறை சார்பில் சம்பா பருவத்திற்கான பயிர் காப்பீட்டு விழிப்புணர்வு ஊர்வலம் வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தில் தொடங்கியது.
இணை இயக்குநர் முருகேசன் கொடியசைத்து துவக்கினார். வேளாண், தோட்டக்கலை துணை இயக்குநர்கள் ஐரின் மேரி ஆக்னெட்டா, ராணி, பிரபா, உதவி இயக்குநர்கள் பரமேஸ்வரன், சுபசாந்தி கலந்து கொண்டனர்.
முருகேசன் கூறிய தாவது: இந்தாண்டு மதுரை மாவட்டத்தில் 379 கிராமங்களில் சம்பா நெல் பருவத்திற்கு 12 ஆயிரத்து 882 எக்டேர் பரப்பளவில் பயிர் காப்பீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 620 விவசாயிகள் 676 எக்டேரில் பயிர் காப்பீடு செய்துள்ளனர். நவ. 15க்குள் பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெற விழிப்புணர்வு முகாம் நடத்து கிறோம் என்றார்.

