/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஹாக்கி பார்வையாளர்களுக்கு கழிப்பறை வசதி எங்கே
/
ஹாக்கி பார்வையாளர்களுக்கு கழிப்பறை வசதி எங்கே
ADDED : நவ 12, 2025 12:51 AM
மதுரை: மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நவ. 28 முதல் டிச. 12 வரை உலக ஜூனியர் ஹாக்கி போட்டி நடக்க உள்ள நிலையில் பார்வையாளர்களுக்கு போதிய கழிப்பறைகள் இல்லை.
ஹாக்கி அரங்கையொட்டி அமைக்கப்பட்டு வரும் நிரந்தர காலரியில் வி.ஐ.பி.,க்கள், பார்வையாளர்கள் அமர்வதற்கென 320 இருக்கைகள், அங்கேயே கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. மதுரை மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள், ஹாக்கி ரசிகர்கள் அதிகமாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அரங்கின் இருபக்கமும் 1200 பார்வையாளர்கள் அமரும் வகையில் தற்காலிக காலரி அமைக்கும் பணியும் நடக்கிறது.
மின்னொளி போட்டியாக நடத்துவதற்கு 'ஹைமாஸ்' விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே பார்வையாளர்கள் நீண்ட நேரம் அமர்ந்து போட்டியை ரசிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவர்களுக்கான கழிப்பறை வசதிகள் போதுமான அளவில் இல்லை.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜாவிடம் கேட்டபோது, ''மாநகராட்சி மூலம் மொபைல் டாய்லெட்டுகளை கூடுதலாக கொண்டுவரவும், தண்ணீர் வசதிக்கும் ஏற்பாடு செய்துள்ளோம். ஹாக்கி அரங்கு பணி, தற்காலிக காலரி பணி நடக்கிறது. ரோடு அமைக்கும் பணி உட்பட அனைத்து வேலைகளும் முடிந்தபின் எந்தெந்த இடத்தில் மொபைல் டாய்லெட் வைப்பதென முடிவு செய்யப்படும்'' என்றார்.

