தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சி.எஸ்.ஐ., பல் மருத்துவ கல்லுாரி பட்டமளிப்பு விழா

 சி.எஸ்.ஐ., பல் மருத்துவ கல்லுாரி பட்டமளிப்பு விழா

 சி.எஸ்.ஐ., பல் மருத்துவ கல்லுாரி பட்டமளிப்பு விழா


ADDED : மார் 08, 2026 04:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 04:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை சி.எஸ்.ஐ., பல் மருத்துவக் கல்லுாரி ஆராய்ச்சி மையத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. தென்னிந்திய திருச்சபை பொதுச் செயலாளர் பெர்னாண்டஸ் ரத்தினராஜா முன்னிலை வகித்தார்.

மாணவர்களுக்கு கர்நாடகா ஏ.டி.ஜி.பி., ஹரிசேகரன் பட்டம் வழங்கி பேசுகையில், ''நோயாளிகள் டாக்டர்கள் வழங்கிய மருத்துவத்தை மறந்து விடுவர். ஆனால் டாக்டர் வழங்கிய உணர்வு நிலையை மறக்கமுடியது. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் டாக்டரை விட நோயாளிகள் அதிக விஷயங்களை தெரிந்து கொண்டு 'மினி டாக்டரைப்' போல் செயல்படுகின்றனர். எனவே டாக்டர்கள் தொடர்ந்து படித்து தங்களை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்'' என்றார்.

84 இளநிலை, 24 முதுநிலை மருத்துவ மாணவர்கள் பட்டம் பெற்றனர். சி.எஸ்.ஐ., பிஷப் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன், கர்நாடக தெற்கு மண்டல பிஷப் ஹேமச்சந்திரகுமார், மதுரை முன்னாள் பிஷப் ஜோசப் உட்பட பலர் பங்கேற்றனர். கல்லுாரி டீன் சரவணன், முதல்வர் தன்வீர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us