ADDED : ஜூலை 15, 2025 03:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டி பகுதியில் வைகை பெரியாறு கால்வாய் பாசனத்தில் 45 ஆயிரம் ஏக்கர் இருபோக நெல் சாகுபடி நடக்கிறது. வயலில் 2ம் போக சாகுபடி பணிகளை முடித்த விவசாயிகள் முதல் போகத்திற்காக உழவு மற்றும் நாற்றங்கால் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஜூன் 15ல் இப்பகுதி முதல் போக பாசனத்திற்கு அணை திறக்கப்பட்டது. அறுவடை முடிந்த வயல்களில் டிராக்டர் மூலம் உழுதும், பாரம்பரிய முறையில் உழவுமாடு வைத்து சமன் செய்தும் நெல் நடவுப் பணியில் தீவீரம் காட்டி வருகின்றனர். உழவுப் பணிகளுக்காக பிற பகுதி தொழிலாளர்கள், டிராக்டர், நடவு இயந்திரங்களுடன் முகாமிட்டுள்ளனர்.