தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வாடிக்கையாளர் உண்மை சரிபார்ப்புக்கு அவகாசம் நீட்டிப்பு

 வாடிக்கையாளர் உண்மை சரிபார்ப்புக்கு அவகாசம் நீட்டிப்பு

 வாடிக்கையாளர் உண்மை சரிபார்ப்புக்கு அவகாசம் நீட்டிப்பு

1


ADDED : செப் 09, 2026 04:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2026 04:31 AM

1


1
Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சார்பில், வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையில் சமையல் காஸ் சிலிண்டர் வினியோகம் செய்யப்படுகின்றன. இந்த சிலிண்டரை வாடிக்கையாளர்கள் வாங்கியதும், வங்கி கணக்கில் மத்திய அரசின் மானிய தொகை செலுத்தப்படுகிறது.

இதற்காக, வாடிக்கையாளர்களின் உண்மை தன்மையை சரிபார்க்கும் பணி நடக்கிறது. எனவே, சிலிண்டர் இணைப்பு யார் பெயரில் உள்ளதோ, அவர், காஸ் ஏஜன்சிக்கு சென்று விரல் ரேகை பதிவு செய்தோ அல்லது எண்ணெய் நிறுவனங்களின் மொபைல் போன் செயலி வாயிலாகவோ உண்மை சரிபார்ப்பு பணியை முடிக்கலாம்.

இந்த பணியை முடிக்க, செப்.7 வரை அவகாசம் வழங்கப்பட்டது. நேற்று முன்தினத்துடன் அந்த அவகாசம் முடிவடைந்த நிலையில் செப்.15ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மொத்தம், 2.40 கோடி வாடிக்கையாளர்களில், 94 சதவீதம் பேர் உண்மை சரிபார்ப்பு பணியை முடித்துள்ள நிலையில், 6 சதவீதம் பேர் முடிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us