/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பள்ளி முன் தேங்கும் மழை நீரால் பாதிப்பு
/
பள்ளி முன் தேங்கும் மழை நீரால் பாதிப்பு
ADDED : ஏப் 19, 2025 06:28 AM

வாடிப்பட்டி; வாடிப்பட்டி ஒன்றியம் செம்மினிபட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளி முன் தேங்கும் மழைநீரால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இப்பள்ளி நுழைவாயில் முன் சிறு மழைக்கும் தண்ணீர் தேங்கி, சகதியாக மாறுகிறது. பள்ளியின் வகுப்பறைகள், கிராம மந்தை பொதுப்பாதை இடையே தனித்தனி கட்டடங்களில் செயல்படுகின்றன. இதனால் ஒரு வகுப்பில் இருந்து மற்றொரு வகுப்பறைக்கு செல்ல மாணவர்கள், ஆசிரியர்கள் சிரமப்படுவதால் தயங்குகின்றனர்.
இக்கிராம மந்தை முழுவதும் சேறும் சகதியுமாக மாறிவிடுவதால் மாணவர்கள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்த முடியவில்லை. கிராம மக்களும் தங்கள் வழக்கமான பயன்பாட்டுக்கு சிரமப்படுகின்றனர். ஒன்றிய நிர்வாகம் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
செம்மினிப்பட்டி ஊராட்சி நடுநிலை பள்ளி முன் மழைநீர் தேங்கியுள்ளது.

