ADDED : செப் 28, 2025 02:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார், செப்.28-- அலங்காநல்லுார் ஒன்றியம் மாணிக்கம்பட்டி ஊராட்சி கிழக்குத் தெருவில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரம் பாதித்துள்ளது.
இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் வடிகாலை கடந்து தெருவில் ஓடுகிறது. ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும்நடவடிக்கை இல்லை.