UPDATED : நவ 17, 2026 06:22 PM
ADDED : நவ 17, 2026 06:22 PM

அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மீனாட்சி சொக்கர் சைவ சமய அறக்கட்டளை சார்பில் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் சூரசம்ஹாரம் விழாவில் இசைவிழா, நாட்டிய விழா நடந்தது.
அக்சிதா நாட்டிய பள்ளி குரு ஹேமலதா, 20 மாணவிகள் நாட்டியம் ஆடி திருப்புகழ் பாடி விரதமிருந்த பக்தர்களை மகிழ்வித்தனர். மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் வழக்கறிஞர் தமிழினி, சைவ சித்தாந்த ஆசிரியர் ராதா சான்றிதழ் வழங்கினர். ஏற்பாடுகளை அறக்கட்டளை இயக்குநர் ரமேஷ் செய்தார்.
