நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: தும்பைபட்டி கோமதி அம்பிகை, சங்கரலிங்கம் சுவாமி, சங்கரநாராயணசாமி கோயிலில் ஆடித் தபசு திருவிழா ஜூலை 28ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று பக்தர்கள் கோயில் வீட்டில் இருந்து தீர்த்தம், பால், சந்தனக் குடத்தை கோயிலுக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து அம்மனுக்கு 16 வகை அபிஷேகம் நடந்தது.
பிறகு பக்தர்கள் மா விளக்கு ஏற்றி, பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கோமதி அம்பிகை வேண்டுதலுக்கு இணங்க சங்கரலிங்கம் சுவாமி, சங்கர நாராயணராக காட்சி தந்தார். ஏற்பாடுகளை சங்கர நாராயணர் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.