
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மேலப்பச்சேரி பகுதியில் குடியிருப்புகளுக்கு முன்பு தோண்டப்பட்ட பள்ளம் பல மாதங்களாக மூடப்படாமல் அபத்தான நிலையில் உள்ளது.
அப்பகுதி மக்கள் கூறுகையில், 'எதற்காக அந்த பள்ளம் தோண்டப்பட்டது என்று தெரியவே இல்லை. அங்கு எந்த பணியும் நடைபெறவில்லை. மூன்று மாதங்களுக்குமேல் மூடப்படாமல் உள்ளது. அப்பகுதியில் விளையாடச் செல்லும் குழந்தைகள் பள்ளத்தில் விழுந்து காயம் அடைகின்றனர். ஆபத்தான நிலையில் உள்ள அந்த பள்ளத்தை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை தேவை' என்றனர்.

