sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஊராட்சிகளில் அபாய குடிநீர் தொட்டிகளால் ஆபத்து  பழசானதால் பராமரிப்பில்லை ஊழியர்களாலும் முடியல குளோரினேசனும் உதவல

/

ஊராட்சிகளில் அபாய குடிநீர் தொட்டிகளால் ஆபத்து  பழசானதால் பராமரிப்பில்லை ஊழியர்களாலும் முடியல குளோரினேசனும் உதவல

ஊராட்சிகளில் அபாய குடிநீர் தொட்டிகளால் ஆபத்து  பழசானதால் பராமரிப்பில்லை ஊழியர்களாலும் முடியல குளோரினேசனும் உதவல

ஊராட்சிகளில் அபாய குடிநீர் தொட்டிகளால் ஆபத்து  பழசானதால் பராமரிப்பில்லை ஊழியர்களாலும் முடியல குளோரினேசனும் உதவல

1


ADDED : பிப் 16, 2026 05:51 AM

Google News

ADDED : பிப் 16, 2026 05:51 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர் ஊராட்சிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பின்றி உள்ளதால் சுத்தம் செய்ய முடியாமல் பணியாளர்கள் தவிக்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் 420 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் 25 முதல் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள்தான் அதிகம் உள்ளன. இவற்றை சரிவர பராமரிக்காமல் விட்டு விட்டனர். இதில் பல தொட்டிகள் இடியும் அபாய நிலையில் உள்ளன.

இவை 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்பட வேண்டும். ஆனால் பல மேல்நிலை நீர்த்தக்க தொட்டிகள் இடியும் நிலையிலும், தொட்டியில் மேலே மூடிகள் இல்லாமலும், தொட்டிக்குள் இறங்கும் படிகள் பழுதான நிலையிலும் உள்ளதால் பணியாளர்கள் மேலே ஏறி சுத்தம் செய்வது சிரமமாக உள்ளது. இதனால் பல கிராமங்களில் இவற்றை சுத்தம் செய்யாமல் விட்டுவிட்டனர். இதனால் ஓராண்டுக்கு முன்பு, ஊழியர்கள் தொட்டி மேல் ஏறாமல் கீழிருந்தே சுத்தம் செய்ய குளோரிநேசன் இயந்திரம் பொருத்தப்பட்டது. இந்த இயந்திரம் சில வாரங்கள் இயங்கின. அதன்பின் பெரும்பாலான இயந்திரங்கள் பழுதாகி விட்டன. இதன்பின்னர் மீண்டும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை சுத்தம் செய்யும் பணி இல்லாமல் போய்விட்டது.

இதனால் மாவட்டத்தில் பரவலாக பல ஊராட்சிகளில் நீர்த்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்யாமல் குடிநீர் அசுத்தமாக வருகிறது. இது தொற்று நோய் பரவ காரணமாகிறது.

ஊராட்சி செயலர்கள் கூறியதாவது: முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய பல மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் பராமரிக்காமல் உள்ளன. இதை சரிவர பராமரித்தால் மட்டுமே சுத்தம் செய்ய முடியும். இதற்கென தனியாக நிதி ஒதுக்கி மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளை சரி செய்ய வேண்டும் என்றனர். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை பராமரித்து பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்குவதை மாவட்ட நிர்வாகம் உறுதிசெய்ய வேண்டும்.






      Dinamalar
      Follow us