/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சேதமடைந்த ரோட்டில் அபாய போக்குவரத்து
/
சேதமடைந்த ரோட்டில் அபாய போக்குவரத்து
ADDED : டிச 11, 2025 05:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் அருகே மேலக்காலில் சேதமடைந்த ரோட்டை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
சங்கரநாராயணன் கூறியதாவது: மதுரை - மேலக்கால் மெயின் ரோட்டில் டாஸ்மாக் அருகே ரோட்டின் ஒரு பாதி 50 மீ., நீளத்திற்கு சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. வாகனங்கள் சேதமடைந்த பகுதியை தவிர்ப்பதால் ஒருவழிப்பாதையில் செல்கின்றன. இதன் காரணமாக எதிரே வரும் வாகனங்களுடன் விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. டூவீலரில் செல்வோர் வழுக்கி விழுந்து காயம் அடைகின்றனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

