/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி விடிய விடிய மறியல்
/
கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி விடிய விடிய மறியல்
கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி விடிய விடிய மறியல்
கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி விடிய விடிய மறியல்
ADDED : ஜூலை 18, 2025 04:28 AM
திருமங்கலம்: திருமங்கலம் தாலுகா திரளியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன் 40, இவர் கடந்த திங்கட்கிழமை இரவு வீட்டு வாசலில் கட்டிலில் படுத்திருந்தார். மனைவி பூங்கொடி மற்றும் குழந்தைகள் வீட்டின் உள்ளே தூங்கினர். நள்ளிரவு 12:30 மணிக்கு பாண்டியராஜனின் அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் வெளியில் வந்து பார்த்தபோது தலையில் வெட்டு காயத்தோடு மயங்கி கிடந்தார்.
மதுரை அரசு மருத்துவமனையில் அவர் நேற்று முன்தினம் இரவு இறந்தார். அவரது உறவினர்கள் திருமங்கலம் சேடப்பட்டி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஏ.எஸ்.பி., அன்சுல் நாகர், இன்ஸ்பெக்டர் சுப்பையா பேச்சு வார்த்தை நடத்தினர்.
கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் குற்றவாளிகளை கைது செய்தால்தான் மறியலை கைவிடுவோம் எனக் கூறி விடிய விடிய மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து வாகனங்கள் மாற்றுப் பாதையில் அனுப்பப்பட்டன. இந்நிலையில் காலை 7:00 மணிக்கு அவர்களை போலீசார் கலைந்து போக செய்தனர்.
இதையடுத்து காலை 9:00 மணி முதல் திருமங்கலம் தாலுகா போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். கொலையாளிகளை கைது செய்யயும்படி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதியம் 2:30க்கு பின்னர் கலைந்து சென்றனர். திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.