/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாடு முட்டியதில் பலி; இழப்பீடு கோரி வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
/
மாடு முட்டியதில் பலி; இழப்பீடு கோரி வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
மாடு முட்டியதில் பலி; இழப்பீடு கோரி வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
மாடு முட்டியதில் பலி; இழப்பீடு கோரி வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ADDED : டிச 14, 2024 05:16 AM
மதுரை : மதுரை ஒத்தக்கடை ரோட்டில் திரிந்த மாடு முட்டியதில் ஒருவர் பலியானதற்கு இழப்பீடு கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே குருவிக்கொண்டன்பட்டி மீனாட்சி தாக்கல் செய்த மனு: எனது மகள் மதுரை ஒத்தக்கடையில் மளிகைக் கடை நடத்துகிறார். அவரை பார்க்க நானும், கணவர் லட்சுமணனும் ஜூலை 9 ல் ஒத்தக்கடை வந்தோம்.
மறுநாள் காலை கணவர் கடைக்கு செல்வதாகக்கூறிச் சென்றார். ரோட்டில் திரிந்த சில மாடுகள் சண்டை போட்டுக்கொண்டிருந்தன.
ஒதுங்கிச் சென்ற கணவரை ஒரு மாடு முட்டி துாக்கி எறிந்தது. காயமடைந்த கணவர் இறந்தார்.
ரோடுகளில் திரியும் கால்நடைகளால் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் பொறுப்பு உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளுக்கு உள்ளது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒத்தக்கடை தெருக்களில் திரியும் மாடுகளை கட்டுப்படுத்துவதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனக்குறைவாக செயல்பட்டுள்ளனர்.
இதனால் கணவர் இறந்துள்ளார். இயற்கை பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்கக்கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி ஜி.கே.இளந்திரையன்: தமிழக வருவாய்த்துறை கூடுதல் தலைமைச் செயலர், மதுரை கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. ஒத்தக்கடை ஊராட்சி நிர்வாகத்தை ஒரு எதிர்மனுதாரராக இணைக்க வேண்டும். விசாரணை ஜன.21க்கு ஒத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டார்.