/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருப்பரங்குன்றம் மலை பகுதியை பல்லுயிர் தலமாக அறிவிக்க முடிவு
/
திருப்பரங்குன்றம் மலை பகுதியை பல்லுயிர் தலமாக அறிவிக்க முடிவு
திருப்பரங்குன்றம் மலை பகுதியை பல்லுயிர் தலமாக அறிவிக்க முடிவு
திருப்பரங்குன்றம் மலை பகுதியை பல்லுயிர் தலமாக அறிவிக்க முடிவு
ADDED : பிப் 18, 2025 06:43 AM

மதுரை; மதுரை, திருப்பரங்குன்றம் மலைப்பகுதியை பாரம்பரிய பல்லுயிர் தலமாக அறிவிக்க, அறநிலையத்துறைக்கு மாவட்ட வனத்துறை கடிதம் எழுதியுள்ளது.
மதுரை, ஹார்விப்பட்டி இளங்கோ, திருப்பரங்குன்றம் மலைப்பகுதியை பாரம்பரிய பல்லுயிர் தலமாக அறிவிக்ககோரி, மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்திருந்தார். இதுதொடர்பாக, அவருக்கு வனத்துறை பதில் அளித்துள்ளது.
அதில், வனத்துறை சார்பில், களத்தணிக்கை மேற்கொண்டதில், குறிப்பிட்ட மலைப்பகுதியில் மாநகராட்சி சூழலியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த இடமானது அறநிலையத்துறையின் கீழ் உள்ளது. குறிப்பிட்ட பகுதியில் பல்வேறு வகையான மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள பகுதிகளில் அறநிலையத்துறை அனுமதிக்கும் பட்சத்தில், வனத்துறை வாயிலாக மரக்கன்றுகள் நடவு தொடர்பான திட்டங்கள் அமல்படுத்தப்படும்.
அறநிலையத்துறையிடம் தடையில்லா சான்று கோரி, கடிதம் வாயிலாக தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வழங்கிய பின்னர் பல்லுயிர் பாதுகாப்பு தலமாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, மதுரை வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் தருண்குமார் தெரிவித்துள்ளார்.

