ADDED : ஜூலை 01, 2025 02:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் தமிழ்நாடுஅரசு ஊழியர்கள் சங்க மாநில செயற்குழுக் கூட்டம் மாநில தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில் நடந்தது.
பொதுச் செயலாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் பாலசுப்ரமணியன் நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தார்.
கூட்டத்தில் காரைக்குடிகல்லுாரி முதல்வர் மீது நடவடிக்கை எடுத்து பாதித்த அலுவலக உதவியாளர் முத்துமாரியை பாதுகாக்க வலியுறுத்தி, உயர்கல்வித்துறை மண்டல அலுவலகம் முன்பு முறையீடு நடத்துவது, ஜூலை 9ல் அகில இந்தியவேலை நிறுத்தத்தில் பங்கேற்பது, ஆக.9ல் மதுரையில் மாநில சிறப்பு பேரவையை நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.