/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சிக்கு 'டிபிப்ரிலேட்டர்' கருவி
/
மாநகராட்சிக்கு 'டிபிப்ரிலேட்டர்' கருவி
ADDED : மே 09, 2025 04:15 AM
மதுரை: சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை அரசு மருத்துவமனையின் செயல்பாட்டில் இருந்த இதயதசைகளுக்கு 'கரன்ட் ஷாக்' தரும் 'டிபிப்ரிலேட்டர்' கருவி தற்காலிகமாக மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
தேரோட்டம் (இன்று) முதல், எதிர்சேவை, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் மே 12 வரை மக்கள் கூட்டமாக கூடும் இடங்களில் திடீரென யாருக்கும் இதய அதிர்ச்சி, இதய அடைப்பு ஏற்பட்டால் இக்கருவி மூலம் உடனடியாக இதயதசைகளுக்கு 'கரன்ட் ஷாக்' வழங்கப்படும். இதன் மூலம் பாதிக்கப்பட்டவரை உடனடியாக காப்பாற்றலாம்.
முதன்முறையாக சித்திரை திருவிழாவிற்கு பயன்படும் வகையில் இக்கருவியை மாநகராட்சி நகர்நல அலுவலர் இந்திராவிடம் மருத்துவமனை ஆர்.எம்.ஓ., சரவணன் ஒப்படைத்தார்.

