நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை குருவித்துறை, சோழவந்தான் பகுதிகளில் ரோட்டோரத் தொழிலாளர்கள், ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள முதியவர்கள் என 500 பேருக்கு விருட்சா அறக்கட்டளை, ராக்கிங் லேடீஸ் குரூப் சார்பில் தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகள், இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் சக்கிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் தென்னவன் முன்னிலையில் 300 மாணவர்களுக்கு இனிப்பு, புத்தாடை வழங்கப்பட்டன.
அறக்கட்டளை நிறுவனர் ரஞ்சிதா தலைமை வகித்தார். அவருடன் அறக்கட்டளை மற்றும் லேடீஸ் குரூப் நிர்வாகிகள் கவிதா, சபிதா, சுஜி, பிரதீபா பங்கேற்றனர்.