திருப்பரங்குன்றம்: தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பணியாளர்களுக்கு அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா புத்தாடைகள், இனிப்புகள் வழங்கினார். அறங்காவலர் சண்முகசுந்தரம் சார்பில் வெடி, இனிப்பு வழங்கப்பட்டது.
மாநகராட்சி மேற்கு மண்டல துாய்மை பணியாளர்களுக்கு மண்டல தலைவர் சுவிதா புத்தாடைகள், இனிப்புகள் வழங்கினார்.
தி.மு.க., தெற்கு மாவட்டம் சார்பில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு புத்தாடைகளை இளைஞரணி அமைப்பாளர் விமல் வழங்கினார். தானப்பமுதலி தெரு பெட்கிராட் சார்பில் மாநகராட்சி நகர்ப்புற வீடற்றோர் தங்கும் இல்லத்தில் உள்ளவர்களுக்கு புத்தாடை வழங்கும் விழா நடந்தது.
நிர்வாக இயக்குநர் சுப்புராமன் தலைமை வகித்தார். மேயர் இந்திராணி பொன்வசந்த் வழங்கினார்.
மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, நகர்நல அலுவலர் இந்திரா, உதவி கமிஷனர் பிரபாகரன், சுகாதார ஆய்வாளர்கள் ராமச்சந்திரன், ரமேஷ், சமுதாய அமைப்பாளர் பஞ்சவர்ணம், பெட்கிராட் நிர்வாகிகள் கண்ணன், கிருஷ்ணவேணி, அங்குசாமி, சுசீலா, சாராள்ரூபி, இந்திரா கலந்து கொண்டனர். ஜெயலட்சுமி நன்றி கூறினார்.