/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஊராட்சி செயலருக்கு பி.டி.ஓ., சம்பளம் வழங்க வலியுறுத்தல் * வளர்ச்சி துறை பணியாளர்கள் எதிர்பார்ப்பு
/
ஊராட்சி செயலருக்கு பி.டி.ஓ., சம்பளம் வழங்க வலியுறுத்தல் * வளர்ச்சி துறை பணியாளர்கள் எதிர்பார்ப்பு
ஊராட்சி செயலருக்கு பி.டி.ஓ., சம்பளம் வழங்க வலியுறுத்தல் * வளர்ச்சி துறை பணியாளர்கள் எதிர்பார்ப்பு
ஊராட்சி செயலருக்கு பி.டி.ஓ., சம்பளம் வழங்க வலியுறுத்தல் * வளர்ச்சி துறை பணியாளர்கள் எதிர்பார்ப்பு
ADDED : டிச 24, 2024 11:52 PM

மதுரை:'ஊராட்சிகளில் பணியாற்றும் செயலர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் எனும் பி.டி.ஓ., மூலம் சம்பளம் வழங்க வேண்டும்' என ஊரக வளர்ச்சித் துறை இயக்குனரிடம் பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் பொன்னையாவிடம், அனைத்துப் பணியாளர்கள் சங்க மாநில தலைவர் சார்லஸ், பொதுச் செயலர் ரவி, ஒருங்கிணைப்பாளர் குமரேசன், பொருளாளர் பெரியசாமி அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
ஊராட்சிகளில் பணியாற்றும் செயலர்களுக்கு பி.டி.ஓ.,க்கள் மூலம் சம்பளம் வழங்க வேண்டும். பத்தாண்டு, இருபதாண்டு பணிமுடித்தோருக்கு முறையே தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.
ஊராட்சி செயலர்களுக்கு ஒன்றிய அளவில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்த உத்தரவு வழங்கியமைக்கு நன்றி. அதேசமயம் பணிமாறுதல் வழங்கும்போது அவர்களுக்கு பாதிப்பின்றி வழங்க வேண்டும். ஊராட்சியில் பணிபுரியும் குடிநீர் மேல்நிலைத் தொட்டி இயக்குனர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் அளிக்க வேண்டும்.
உதவி இயக்குனர் நிலையில் இருந்து இணை இயக்குனர், பி.டி.ஓ., நிலையில் இருந்து உதவி இயக்குனர் பதவி உயர்வு வழங்க வேண்டும். உதவி, ஒன்றிய பொறியாளர் நிலையில் இருந்து உதவி செயற்பொறியாளர் பதவி உயர்வு அளிக்க வேண்டும். ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு மதிப்பீடு அளவை, 5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.
ஜல்ஜீவன் திட்ட கணினி உதவியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். ஊராட்சி துாய்மைக் காவலர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். துாய்மைப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சி முகமை, கலெக்டர் அலுவலகம், உதவி இயக்குனர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம் என பணியாற்றும் அனைத்து கணினி இயக்குனர்களுக்கும் மாதம் ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்.
மாவட்ட, வட்டார ஒருங்கிணைப்பாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். ஊராட்சிகளில் பணியாற்றும் வி.பி.ஆர்.சி., கணக்காளர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கென தனி பி.டி.ஓ., பணியிடம் உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.