/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விரிவாக்க பணிக்கு இடையூறு திருநகரில் கடைகள் அகற்றம்
/
விரிவாக்க பணிக்கு இடையூறு திருநகரில் கடைகள் அகற்றம்
விரிவாக்க பணிக்கு இடையூறு திருநகரில் கடைகள் அகற்றம்
விரிவாக்க பணிக்கு இடையூறு திருநகரில் கடைகள் அகற்றம்
ADDED : நவ 06, 2024 04:42 AM

திருநகர்: திருநகரில் ரோடு விரிவாக்கத்திற்கு இடையூறாக இருந்த கடைகள் அகற்றப்பட்டன.
பழங்காநத்தம் - திருநகர் இடையே நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி நடக்கிறது. திருநகர் இரண்டாவது பஸ் நிறுத்தம் பகுதியில் ஒன்றிய நிர்வாகத்திற்குரிய வணிக வளாகம் உள்ளது. அது ரோடு விரிவாக்கத்திற்கு இடையூறாக இருந்ததால் அதனை அகற்றும்படி அதிகாரிகள் தெரிவித்தனர். நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் இருந்தது.
இந்நிலையில் நேற்று காலை அந்த வணிக வளாகம் அகற்றப்பட்டது. அக்கட்டடத்தில் வாடகைக்கு இருந்தவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீஸ் பாதுகாப்புடன் அந்த வணிக வளாகம் அகற்றப்பட்டது. அதில் கடை வைத்திருந்தவர்கள் கூறுகையில், ''பல ஆண்டுகளாக இங்கு கடைகள் நடத்துகிறோம். ஒன்றியத்திற்கு வாடகையும் செலுத்தி வருகிறோம். இந்த நிலையில் கடைகள் அகற்றப்பட்டு விட்டது. எங்களுக்கு வேறு பிழைப்பு இல்லை. அதிகாரிகள் ஒன்றிய அலுவலகப்பகுதியில் கடைகள் கட்டித் தர வேண்டும்'' என்றனர்.