நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: செல்லம்பட்டி ஒன்றிய அலுவலகம் முன்பு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் செல்லம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கீதா பணியிட மாறுதலை ரத்து செய்யவும், சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் பி.டி.ஓ., சோமதாஸ் தற்காலிக பணிநீக்கத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வட்டக்கிளை தலைவர் ஜெயபாலன், மாவட்ட நிர்வாகிகள் சிவமணி, அன்பழகன், பாலமுருகன் பங்கேற்றனர். உசிலம்பட்டி ஒன்றிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டக்கிளை தலைவர் ஆசையன் தலைமையில் சங்கத்தினர் பங்கேற்றனர்.