நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு எதிரே உள்ள பஸ் ஸ்டாப் 1990 முதல் மக்கள் பயன்பாட்டிற்காக உள்ளது. இதை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தங்குடி உள்ளிட்ட பகுதி மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்பஸ் ஸ்டாப் மதுரை உட்பட 6 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும், நோயாளிகளுக்கும், அவசர சிகிச்சைக்கு வருவோருக்கும் பயனுள்ளதாக உள்ளது. இதை வேறு இடத்திற்கு மாற்றப்போவதாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது அனைத்து தரப்பினருக்கும் சிரமத்தை ஏற்படுத்தும். எனவே இப்பஸ் ஸ்டாப்பை மாற்றக்கூடாது என நோயாளி உறவினர்கள், மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

