ADDED : அக் 18, 2024 05:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ.,) முன்னேற்ற சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். செயலாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். மக்கள் நலத்திட்டங்களுக்கான வருமான உச்ச வரம்பை உயர்த்த வேண்டும்.
விடுமுறை நாட்களில் அலுவலக ஆய்வுக் கூட்டங்களை தவிர்க்க வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் கிராமங்களை பிரித்து வி.ஏ.ஓ., பணியிடங்களை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். பொருளாளர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.