ADDED : அக் 06, 2024 03:31 AM
மதுரை : மதுரையில் தேசிய சிறுபான்மை மக்கள் இயக்க கட்சி, ஆதி கிறிஸ்துவ கூட்டமைப்பு, இந்திய கத்தோலிக்க சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் செபாஸ்டியன் சூசைராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெபாஸ்டின் முன்னிலை வகித்தார்.
சிறுபான்மையினருக்கு கல்லறை தோட்ட பூமியை அரசு தேர்வு செய்து வழங்க, இடங்களை தேர்வு செய்ய கட்சி தலைவர், மாநில ஒருங்கிணைப்பாளர் தலைமையில் சிறுபான்மையின சமூக ஆர்வலர்கள் குழு அமைக்க வேண்டும். மது போதை புழக்கத்தை தடை செய்ய வேண்டும். பாலியல் வன்கொடுமை, ஆணவ படுகொலையை தடுக்க சிறப்பு போலீஸ் பிரிவு துவங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மாநில மகளிரணி செயலாளர் கலாவதி, மாவட்ட பொறுப்பாளர் மனோன்மணி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி செயலாளர் ஜலால் முகமது, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நிர்வாகிகள் சீனிஅகமது, இப்ராஹிம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இயக்க மகளிரணி மாநில செயற்குழு உறுப்பினர் கீதா சுகந்தி நன்றி கூறினார்.