ADDED : டிச 20, 2024 03:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுாரில் நாட்டு மாடு நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி நிர்வாகி முனியாண்டி தலைமை வகித்தார். செயலாளர் ஆதி முன்னிலை வகித்தார். டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்யக்கோரி கோஷம் எழுப்பினர். மேலும் தனி தீர்மானம் கொண்டு வந்த தமிழக அரசுக்கு நன்றி கூறினர்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் துரைச்சாமி, மகாலட்சுமி, அமுதா, கலைவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.