ADDED : அக் 30, 2025 04:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுார்:  புதுார் மின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் டி.என்.இ.பி., எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடந்தது.
அடிப்படை பதவிகளில் உள்ள 65 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்க வேண்டும். ஒப்பந்த, பகுதிநேர பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மாநில செயல் தலைவர் ராஜாங்கம், மாவட்ட செயலாளர்கள் டேவிட் பொன்னையா, சேதுராமன், மாவட்ட செயல் தலைவர் ஆண்டி உட்பட பணியாளர்கள்  பங்கேற்றனர்.

