/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்தில் அடைத்த பாதையை திறக்க ஆர்ப்பாட்டம் போலீசாரிடம் தளபதி எம்.எல்.ஏ., பேச்சுவார்த்தை
/
குன்றத்தில் அடைத்த பாதையை திறக்க ஆர்ப்பாட்டம் போலீசாரிடம் தளபதி எம்.எல்.ஏ., பேச்சுவார்த்தை
குன்றத்தில் அடைத்த பாதையை திறக்க ஆர்ப்பாட்டம் போலீசாரிடம் தளபதி எம்.எல்.ஏ., பேச்சுவார்த்தை
குன்றத்தில் அடைத்த பாதையை திறக்க ஆர்ப்பாட்டம் போலீசாரிடம் தளபதி எம்.எல்.ஏ., பேச்சுவார்த்தை
ADDED : டிச 19, 2024 05:12 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலுக்கு முன்பாக வாகனங்கள் செல்வதை தடுக்க பெரிய ரத வீதி, சன்னதி தெரு, மேம்பாலம் அருகே, கீழ ரத வீதியில் போலீசார் இரும்புத் தடுப்புகளை அமைத்துள்ளனர். உள்ளூர் மக்களுக்கு துன்பம் விளைவிப்பதாக கூறி போலீசாரை கண்டித்து தி.மு.க., கூட்டணி கட்சிகள், பொதுமக்கள், வியாபாரிகள் சங்கத்தினர்நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க., கிருஷ்ணபாண்டி, ஆறுமுகம், ம.தி.மு.க., முருகேசன், இந்திய கம்யூ., மகாமுனி, திருமண மண்டப உரிமையாளர்கள் சங்க செயலாளர் நாகராஜனிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.அங்கு வந்த தி.மு.க., எம்.எல்.ஏ., தளபதி, போலீஸ் துணை கமிஷனர் வனிதா, கூடுதல் துணை கமிஷனர் திருமலை குமார், உதவி கமிஷனர்கள்செல்வின், சசிப்பிரியா, இன்ஸ்பெக்டர்கள் மதுரைவீரன், பஞ்சவர்ணம் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பொதுமக்கள் சார்பில், கீழரத, மேல ரத வீதிகள், சன்னதி தெருக்களில் ஏராளமான வீடுகள் உள்ளன. திருவிழா காலங்களில் அனைத்து தெருக்களிலும் போலீசார் தடுப்புகள் அமைப்பதுடன், அங்கு வசிப்போர் செல்லவும் அனுமதி மறுக்கின்றனர். வீடுகளுக்கு முன் நிறுத்தும் எங்கள் டூவீலர்களுக்கும் அபராதம் விதிக்கின்றனர்.
பெரிய வைர தேர் அருகே கோயிலை ஒட்டி பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல மூங்கில் தடுப்புகளை ரோட்டின் பாதி வரை அமைத்ததால் இந்தாண்டு சிறிய வைர தேரோட்டம் நடக்கவில்லை. கோயில் நிர்வாகமே மழையை காரணம் காட்டுகிறது என்றனர்.
தளபதி எம்.எல்.ஏ.,: உள்ளூரில் வசிப்போரை டூவீலரில் செல்ல அனுமதிக்க வேண்டும். திருவிழா காலங்களில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கலாம். பூக்கடை இருந்த இடத்தில் உள்ள கூண்டை அகற்றி பூக்கடை வைக்க அனுமதிக்க வேண்டும்.
பக்தர்களும், உள்ளூர் வாசிகளுக்கு இடையூறாக நடவடிக்கை கூடாது என போலீசாரிடம் தெரிவித்தார். இது குறித்து இரண்டு நாட்களில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி முடிவெடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.

