நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி:உசிலம்பட்டி தாலுகா அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், டிஜிட்டல் கிராப் சர்வே பணிக்கு தேவையான உபகரணங்கள், கூடுதல் பணியாளர்கள் நியமனம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் பத்மநாபன், சசிகுமார், செல்வராஜ் பங்கேற்றனர்.
மேலுார், பேரையூரிலும் இச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.