நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை; பொதுமாறுதல் கலந்தாய்வில் நிர்வாக மாறுதல் என்ற பெயரில் விதிமீறி மேற்கொள்ளப்படும் மாறுதல் உத்தரவுகளை கண்டித்து ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் திருமங்கலம் தொடக்க கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். செயலாளர் சீனிவாசன், துணை பொதுச் செயலாளர் முருகன் பேசினர். பிற சங்க நிர்வாகிகள் பாஸ்கர், பாண்டி, நவநீதகிருஷ்ணன், ஸ்ரீரங்கநாதன், கணேசன், சந்திரபோஸ், ராஜரத்தினம் பேசினர். பொருளாளர் எமிமாள் ஞானசெல்வி நன்றி கூறினார்.