நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்; உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஏற்பாடுகளுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் திருப்பரங்குன்றம் ஒன்றிய அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட நிர்வாகி வடிவேல் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கண்ணன், ஜெகதீசன், பிரபு முன்னிலை வகித்தனர். ரமேஷ் வரவேற்றார். மாநில பொருளாளர் விஜயபாஸ்கர், வட்டார இணைச் செயலாளர் தங்கமுத்து பேசினர். வட்டார துணைத் தலைவர் ராஜாமணி நன்றி கூறினார்.