நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை முனிச்சாலையில் காங்கிரஸ் சார்பில், 'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்' என்ற பெயரை மாற்றம் செய்த மத்திய அரசை கண்டித்து, மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கவுன்சிலர்கள் எஸ்.வி.முருகன், வி.முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் செய்யது பாபு, மாவட்டத் துணைத் தலைவர் பாலு, வட்டத் தலைவர்கள் சுந்தர், அசார், காமராஜ், ரவிச்சந்திரன், நளினி பங்கேற்றனர்.

