ADDED : செப் 26, 2026 07:04 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை கோச்சடை டி.வி.எஸ்., மொபிலிட்டி பாலிமர் தொழிற்சாலையில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர் சித்தார்த்தன் தலைமை வகித்தார். இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மாநில பயிற்சியாளர் ராஜ்குமார், டெங்கு கொசு உற்பத்தியாகும் மழைநீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து அதனை அழிப்பது, டெங்கு காய்ச்சல் வந்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினார். தொழிற்சாலை சங்கத் தலைவர் குபேந்திரன் நன்றி கூறினார். தொழிற்சாலை தலைவர் கோகுல்ராஜ், மனிதவள மேம்பாடு மூத்த மேலாளர் குருநாத், தொழிலாளர்கள் பங்கேற்றனர். பங்கேற்றவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
