ADDED : செப் 24, 2026 06:53 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தான், வாடிப்பட்டி வட்டார அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் விடுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வாடிப்பட்டி ஆண்கள், பெண்கள், சோழவந்தான் ஆலங்கொட்டாரம், நாச்சிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் விடுதிகளில் டெங்கு, சிக்கன் குனியா மலேரியா காய்ச்சலை தடுக்க வளாகம் சுத்தம் செய்யப்பட்டது.
கொசுப் புகைமருந்து அடிக்கப்பட்டது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். துப்புரவு ஆய்வாளர் ஜெஸி, சுகாதார ஆய்வாளர் ரமேஷ்கண்ணன் முன்னிலை வகித்தனர். டெங்கு மஸ்துார் பணியாளர்கள் பங்கேற்றனர்.
