ADDED : செப் 24, 2026 06:53 PM
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் அனைத்து வகை கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை செப். 24, செப். 25 ல் நடக்கிறது.
கல்லுாரியின் வணிகவியல் உயராய்வு மையம், விளாச்சேரி கொலுபொம்மை உற்பத்தியாளர்கள், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறையின் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் கல்லுாரியில் இக்கண்காட்சி நடைபெறும். இதில் கடவுள்கள், மனிதர்கள், தலைவர்கள், விளையாட்டு சிலைகள், காய்கறிகள், பழங்கள், பறவைகள், விலங்குகளின் சிலைகள், நவராத்திரி கொலு பொம்மைகள் உள்பட அனைத்து வகை பொம்மைகள் இடம் பெற்றன.
முதல்வர் ராமசுப்பையா துவக்கி வைத்தார். வணிகவியல் உயர் ஆய்வு மைய துறை தலைவர் சுரேஷ்பாபு வரவேற்றார். பொம்மை உற்பத்தியாளர் ராமலிங்கம் பேசினார். ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர்கள் கோதை நாச்சியார், தேவிகா, பேராசிரியர்கள் அற்புதராஜ், கீதா, பால சத்தியா, கஜப்பிரியா, சாய் மோகனா, மணிமுத்து ஏற்பாடுகள் செய்தனர்.
கல்லுாரி பொதுமக்கள், பிற கல்லுாரி மாணவர்கள் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை பார்வையிடலாம். அனுமதி இலவசம்.
