/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்னங்குடிபட்டியில் கல்திட்டுகளை ஆய்வு செய்யுமா தொல்லியல் துறை
/
குன்னங்குடிபட்டியில் கல்திட்டுகளை ஆய்வு செய்யுமா தொல்லியல் துறை
குன்னங்குடிபட்டியில் கல்திட்டுகளை ஆய்வு செய்யுமா தொல்லியல் துறை
குன்னங்குடிபட்டியில் கல்திட்டுகளை ஆய்வு செய்யுமா தொல்லியல் துறை
ADDED : அக் 22, 2024 05:16 AM

கொட்டாம்பட்டி: குன்னங்குடிபட்டியில் உள்ள பழங்கால நினைவு சின்னங்களை தொல்லியல் துறை இப் பகுதியில் ஆய்வு செய்ய வேண்டும்.
கருங்காலக்குடி ஊராட்சி குன்னங்குடிபட்டியில் மூவாயிரம் ஆண்டுகள் பழமையான கல்திட்டுகள், கல்வட்டம், கற்குவியல், நடுகல் கல்பதுக்கைகள் காணப்படுகின்றன. இவற்றை பாதுகாக்க எண் கல் வட்டங்கள் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது சங்ககாலத்திற்கு சற்று முந்தைய காலமான 'பெருங்கற்காலம்' என அழைக்கப்படுகிறது.
போர் வீரர்கள் மரணத்தை நினைவு படுத்தும் விதமாக நடுகல் மற்றும் மனைவி உடன் கட்டை ஏறியதை நினைவு படுத்தும் மாசதி கல் உள்ளது. 5 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தை கிராம மக்கள் 'குரங்கணி' என்று அழைக்கின்றனர்.
சமூக ஆர்வலர் செல்வராஜ்: கல்திட்டையில் இரு அறைகள் உள்ளன. அதில், இறந்த இனக்குழு தலைவர்களை தாழியில் புதைத்து அதன் மேல் பகுதியில் கல்திட்டுக்களை உருவாக்கியும், பூமிக்கு அடியில் பள்ளம் தோண்டி கற்களை பதித்துள்ளதையும் கல் பதுக்கை என்கின்றனர். இத் திட்டுக்கள் கட்டட கலையின் தொடக்கம் ஆகும். தவிர இறந்தவர்களை அடக்கம் செய்யும் போது அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் புதைத்திருப்பதால் தொல்லியல் துறையினர் அகழ்வாராய்ச்சி செய்து பழங்கால மக்களின் நாகரீகம், வரலாறு, கலாசாரம் உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவத்தை வெளிக்கொணர வேண்டும் என்றார்.